குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக காவல்துறை மாறவேண்டும்! முதலமைச்சர்.!
The police need to create a crime free situation
குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக காவல்துறை மாறவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில் காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தப் பதக்கங்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ள பெரும் அங்கீகாரம். காவல்துறை என்றாலே தண்டனை வழங்கும் துறையாக பார்க்கிறார்கள்.
ஆனால் காவல்துறை குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் என்றார்.
மேலும் காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிலையை எந்த காவலரும் உருவாக்கி விடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
The police need to create a crime free situation