மாமியாருக்கு பாலியல் தொந்தரவு... மிளகாய்பொடி கலந்த வெந்நீர் ஊற்றி மருமகன் கொலை..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் மாமியாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருமகன் மீது மிளகாய் பொடி கலந்த வெண்ணீர் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (27). இவரது மனைவி மேரி (22). இவர்களுடன் மேரியின் தாய் இன்னாசியம்மாளும் (40) வசித்துவந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மாமியாருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துபோன மாமியார் இதுகுறித்து மகளிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மேரி, கணவரை கண்டித்துள்ளார். இருப்பினும் செல்வராஜ் மது அருந்திவிட்டு வந்து மாமியாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாயும், மகளும் கொதிக்கும் வெண்ணீரில் மிளகாய் பொடி கலந்து வாலிபர் மீது ஊற்றியுள்ளனர்.

இதனால் செல்வராஜ் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராஜ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருவரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகளை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The son in law killed by pouring hot water mixed with chili powder in Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->