சங்கராபுரம் அருகே சொத்து பிரச்சனையில் தந்தையை கீழே தள்ளி கொன்ற மகன்.! - Seithipunal
Seithipunal


சங்கராபுரம் அருகே சொத்து பிரச்சினையில்  தந்தையை கீழே தள்ளி மகன் கொன்றுள்ளான்.

சங்கராபுரம் அருகே கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் குப்பன் தனது குடும்ப சொத்தான ஒன்றரை ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து  மூன்றாவது மகன் ஆறுமுகம் தனது குழந்தையின் பெயரில் 50 சென்ட் நிலத்தை தந்தையிடமிருந்து எழுதி வாங்கியுள்ளார்.

இதை அறிந்த இரண்டாவது மகன் சின்னவன் தந்தையிடம் சென்று சொத்து எழுதி கொடுத்தது பற்றி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சின்னவன் தந்தையை கீழே தள்ளியுள்ளார்.

இதில் கீழே விழுந்த தந்தை மயங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The son who pushed his father down and killed him in sankarapuram near


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->