தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்; 80,496 ஓட்டுநர் உரிமங்களை முடக்கிய போக்குவரத்து ஆணையகம்..!
The Transport Commission has suspended 80496 driving licenses for traffic violations in Tamil Nadu
தமிழகத்தில் கடந்த ஆண்டில், போக்கு வரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக, 80,496 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில்; தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி, 3.70 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடுகின்றன. இதில், இரு சக்கர வாகனங்கள் மட்டும், 03 கோடியே, 90,744. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா பாதிப்புக்கு பின், சொந்த வாகனங்களில் பயணிப்பது அதிகரித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில், நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும், 80,496 ஓட்டுநர் உரிமங்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சட்ட விதிகளின் படி, சிக்னலில் நிற்காமல் சென்றவர்கள் 20,818 பேர்; மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள், 19,498; அதிவேகத்தில் வாகனங்களை இயக்கியவர்கள், 18,589; மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள், 9,402 பேர் அடங்குவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் பயணியரை ஏற்றிய, 6,956 வாகனங்கள்; அதிக சரக்கு ஏற்றிய, 5,233 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்துடன், 13 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை கண்டறிந்து, அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். சிறுவர்களின் எதிர்கால பற்றும் பாதுகாப்பு குறித்தும், அவர்களின் நலன் கருதி, அவர்களை எச்சரித்து அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிராதாகவும், சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி வருவதை தடுக்க, பள்ளி நிர்வாகம் கண்காணிக்கவும் அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
The Transport Commission has suspended 80496 driving licenses for traffic violations in Tamil Nadu