நடத்தையில் சந்தேகம்... கணவர் மீது சுடுதண்ணீரை ஊற்றிய மனைவி..! போலீசார் விசாரணை...! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்த கணவர் மீது மனைவி சுடுதண்ணீர் ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் பழங்காவேரி பாரதி நகர் பகுதியில் சேர்ந்தவர் மகாமுனி (55). இவரது மனைவி உஷா (37). இந்நிலையில் மகாமுனிக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வலிப்பு நோய் காரணமாக ஒரு கையும், காலும் செயல் இழந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்ல முடியாததால் உஷா வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார் . இந்நிலையில் உஷாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மகாமுனி அடிக்கடி உஷாவுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உஷா, தூங்கிக் கொண்டிருந்த மகாமுனி மீது சுடுதண்ணியை ஊற்றியுள்ளார். இதையடுத்து மகாமுனியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மகாமுனியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The wife who poured hot water on her husband in Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->