அரும்பாக்கம் அருகே மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞர்.! ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அரும்பாக்கம் அருகே மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சென்னை பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்த ஜம்புவின் மகன் அஸ்வின்(வயது 25). இவர் கோயம்பேடு சாலையில் அரும்பாக்கம் அருகே மொபட்டில் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த ஆம்னி பஸ், கீழே விழுந்து கிடந்த அஷ்வின் தலை மீது ஏறி இறங்கி உள்ளது. இதில் சக்கரத்தில் சிக்கிய அஸ்வின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பஸ் ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The young man who fell down died on board the bus in arumbakkam near


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->