சினிமா "டிக்கெட் விலை" உயர்த்த வேண்டும்.. தமிழக அரசின் கதவைத் தட்டிய கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சக் கட்டணம் ரூ.150 வரையும், சென்னை தவிர மற்ற இடங்களில் உள்ள ஏசி திரையரங்குகள் ரூ.100 வரையும் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு அனுமதி வழங்கி இருந்தது. 

அதன்பிறகு திரையரங்குகளில் டிக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடியாக திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் தற்பொழுது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசு திரைப்பட டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி மல்டிபிளக்ஸ் ஏசி தியேட்டர்களில் சினிமா டிக்கெட்  கட்டணத்தை 150 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் உள்ள ஏசி தியேட்டர் சினிமா டிக்கெட் கட்டணத்தை 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்கும் பட்சத்தில் தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளின் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theater owners requested TNgovt to raise cinema tickets price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->