தெரியாத நம்பரில் இருந்து கால் வந்தால் எடுக்காதீர்கள்! ஆன்லைன் மோசடி கும்பல் ஒரே நாளில் 3 பேரிடம் கைவரிசை! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆன்லைன் மோசடி கும்பல் ஒரே நாளில் 3 பேரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை சுருட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் மோசடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் ஆன்லைன் மோசடி கும்பல் தொடர்ச்சியாக பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி வருகின்றன.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மூன்று பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொளத்தூர் பகுதியை சேர்ந்த கிரி பிரசாத் என்பவரிடம் பேசிய மோசடி கும்பல் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1லட்சம் பணத்தை திருடி உள்ளது.

அதேபோல ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.58,000 பணத்தையும்,  அமைந்தகரை பகுதியை சேர்ந்த வினோத் என்பவரிடமிருந்து ரூ. 70,000 பணத்தையும் மர்மகும்பல் திருடி உள்ளது. 

இது தொடர்பாக தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற மோசடிகளில் வட மாநிலங்களில் இருந்து நெட்வொர்க் அமைத்து மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theft of Rs 2 lakhs from the bank accounts of 3 people in one day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->