உமாசங்கர் படுகொலையில் அரசியல் பின்னணி உள்ளது..முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!
There is a political background to Umashankars murder Former Chief Minister V Narayanasamy
உமாசங்கர் புகாருக்கு லாஸ்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இறப்பு சம்பவம் நடந்திருக்காது. இது திட்டமிட்ட படுகொலை. இதில் அரசியல் பின்னணி உள்ளது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2-தினங்களுக்கு முன்பு உமாசங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் அப்பகுதியில் உள்ள ஆதாரங்களை விரிவாக போலீசார் விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்ட,8 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த கொலை சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.இந்தநிலையில் இதுகுறித்து புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
உமாசங்கர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் தலைவர்கள் நடமாடமுடியாது நிலை உள்ளது - ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் ஊழல் குறித்து குடியரசுத்தலைவரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.உமாசங்கர் கொலை வழக்கில் காவல்துறையினர் பாரபட்சமாக செயல்படுவதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக உமாசங்கரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை 4-முறை சந்தித்து பாதுகாப்பு தரக்கோரி இருந்தனர்.உமாசங்கர் படுகொலையில் அரசியல் பின்னணி உள்ளது.
கொலை விசாரணை முடிவடையாத நிலையில் எஸ்எஸ்பி கலைவாணன் இச்சம்பவத்தில் அரசியல் பின்னணி இல்லை என கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
கொலைக்கு பொறுப்பேற்று அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும்.உமாசங்கரின் பெற்றோர் முதலமைச்சர் ரங்கசாமியை 4 முறை சந்தித்து பாதுகாப்பு தரக்கோரியும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் 26-ந் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.காவல்துறைக்கு அழுத்தம் தந்தது யார்? ஏன் காவல்துறை விசாரணை செய்யவில்லை என கேள்வி எழுகிறது.
பா.ஜ.க.வில் இருப்போருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தால் எதிர்க்கட்சியினருக்கும் மக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும்? முன்பு நடந்த செந்தில்குமார் கொலைக்கு உள்துறை அமைச்சரை பதவிவிலக கோரினோம். தற்போது நடந்த கொலைக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும்.
சி.பி.ஐ.க்கு விசாரித்தால்தான் உண்மையான பின்னணி தெரியவரும். இல்லாவிட்டால் முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் வழக்கை முடித்து விடுவார்கள். குற்றவாளிகளுக்கு அரசு துணைபோகிறது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
English Summary
There is a political background to Umashankars murder Former Chief Minister V Narayanasamy