பரந்தூர் விவசாயிகளின் கண்ணீருக்கு முடிவு இல்லையா?....ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் மிகப்பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இடம் தேர்வு செய்துள்ளது.

இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இந்த விமான நிலையத்திற்கான 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.ஆனால், இந்த விமான நிலையத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமம் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய கிராம மக்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளாக மேலாக போராட்டம் செய்து வருகின்றனர். 

இதற்கிடையே கடந்த சுதந்திர தினத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் பங்கேற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். மேலும்  பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டு வருகிறது.

மேலும் பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை மொத்தமாக வெளியிடாமல் பகுதி பகுதியாக அரசு  வெளியிட்டு வரும் நிலையில், இது மக்கள் ஒன்றிணைந்து போராடுவதை தடுப்பதற்கான யுக்தி என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத் பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இதற்காக  ஆலோகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There is no end to the tears of Paranthur farmer Tender release to select consultants


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->