திண்டிவனம் அருகே கவனம்.. சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு செல்லும் மக்கள் கவனத்திற்கு..  - Seithipunal
Seithipunal


ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு மக்கள் பயணித்து வருகின்றனர்.

ஆம்னி பஸ்கள் மீண்டும் பேருந்து கட்டண உயர்வை அதிகரித்ததை தொடர்ந்து, போக்குவரத்து துறை, கடந்த மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்காகத் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்குப் பயணம் செய்த பொது மக்கள் மீண்டும் சென்னை, கோயம்புத்தூர் , ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்குத் திரும்ப வருவதற்கு வசதியாக அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் உடன் 850 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கியது.

அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் இந்த இயக்கத்தை கண்காணிக்க தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பாகச் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர். 

இந்த நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கார்கள், பைக்குகள், பேருந்துகள் என்று சாரை சாரையாய் மக்கள் பயணித்து வரும் நிலையில், திண்டிவனம் அருகே சாலையில் பழுது ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து பயணிகளுக்கு மாற்றுப்பாதையை ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thindivanam highway road issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->