#BREAKING | திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அர்ச்சகர் உட்பட அனைவருமே செல்போனை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதற்கு, இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இதுகுறித்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், "கோவில்கள் சுற்றுலா தளங்கள் கிடையாது. கோவிலுக்கு வருபவர்கள் நாகரீகமான உடைகளை அணிய வேண்டும். 

அநாகரிகமான உடைகளை அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் என்ன உங்களுக்கு சத்திரமா? கோவில்களில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை தற்போது உள்ளது.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் வாசலில் கூட புகை படம் எடுப்பதற்கு அனுமதி கிடையாது" என்று சரமரியாக கருத்துக்களை தெரிவித்து நீதிபதி, திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதற்கான சுற்றறிக்கையை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchendur murugan temple cellphone ban


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->