திருச்செந்தூர் கோவிலில் மீன் சமைத்து உண்ணும் மரபுக்கு திடீர் தடையால் பக்தர்கள் வேதனை! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் கோவிலில் மீன் சமைத்து உண்ணும் மரபுக்கு திடீர் தடையால் பக்தர்கள் வேதனை

வங்கக் கடலோரம் அமைந்துள்ளது அனைவருக்கும் பிரியமான திருச்செந்தூர் முருகன் கோவில். முருகன் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த கடவுள் தான். குறிப்பாக தென் மாவட்ட மக்களுக்கு திருச்செந்தூர் முருகன் மேல் அளவுகடந்த பக்தி உள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் என்று ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு திருவிழா மக்கள் வெள்ளத்தில் களை கட்டிக் கொண்டிருக்கும். "கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?" என்றொரு பாடல் கூட திருச்செந்தூர் கோவிலின் பெருமையைக் கூறும்.

இந்நிலையில் தற்போது திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூர் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இவ்விழாவில் முருகனை தரிசித்து விட்டு, மறுநாள் கோவிலுக்கு அருகிலுள்ள மண்டபங்களில் மீன் சமைத்து உண்டு விரதத்தை முடிக்கும் வழக்கம் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென கோவிலில் அசைவ உணவுகளை சமைக்கூடாது என்று கோவிலின் இணை ஆணையர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளதால், அங்கு திரண்டிருக்கும் பக்தர்களிடையே பெரும் குழப்பமும் வேதனையும் நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchendur Murugan Temple cooking and eating fish ban


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->