திடீரென உள்வாங்கிய கடல் - திருச்செந்தூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம் மற்றும் மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி பவுர்ணமி வருகிறது. அதுமட்டுமல்லாமல், தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதன் காரணமாக இன்று திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது.

இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதன் மீது ஏறி நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruchenthur sea engulfed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->