மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்திற்கு பாதிப்பா?
new air low pressure formed bay of bengal
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக் கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், "வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறையும்.
இதனால், மழையும் குறையும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. தொடர்ந்து மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. வரும் 15-ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 14ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இது டிசம்பர்16-ம் தேதி வட இலங்கை - தமிழகத்தை அடையக்கூடும் அடுத்த 2 வாரத்திற்கு புயல் உருவாக வாய்ப்பில்லை" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
new air low pressure formed bay of bengal