ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக திருமாவளவன் தாக்கல் செய்த மனு! அவசர வழக்காக விசாரிக்க மறுக்கும் உயர் நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய திருமாவளவனுக்கு அறிவுறுத்தல்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார் . அந்த மனுவில் "ஆர்எஸ்எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பிரித்தாலும் கொள்கை கொண்ட ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்புச் சேர்ந்த கோட்சே, காந்தியை கொன்றதற்கு இனிப்பு வழங்கி கொண்டாடியது இந்த அமைப்புதான். 

மேலும் காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக்கூடாது. விஜயதசமி பண்டிகைக்கு நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு எதிராக இந்த பேரணி நடத்துவது அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிப்பதற்கு ஆர்எஸ்எஸ் முயற்சி செய்கிறது. நீதிமன்றம் நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

தற்பொழுது பாஜக கட்சியின் மாவட்ட தலைவர்கள் விளம்பரத்திற்காக தங்கள் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசி வரும் சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும். எனவே காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என்றும் பேரணிக்கு அனுமதி அளித்ததை திரும்ப பெற வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கினை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்று அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற "ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற கோரும் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவினை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு வேண்டுமானால் செய்யுங்கள்" என மனுதாரருக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan directed to appeal against order granting permission to RSS rally


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->