தலித்துகளுக்கு எதிராக செயல்படும் தமிழக காவல்துறை.. திருமாவளவன் ஆவேசம்..!!
Thirumavalavan said Tamil Nadu police working against Dalits
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்கு முறையை கையாள்வதாக திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற விசிக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். தமிழகத்தில் காவல்துறையினர் விசிகவினர் மீது ஒடுக்கு முறையை கையாள்வதும் அதனை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் விசிகவினர் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்படி திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து காவல்துறையினர் ஒரு தலைவட்சமாக விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்" என திருமண விழா நிகழ்ச்சியில் திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.
English Summary
Thirumavalavan said Tamil Nadu police working against Dalits