இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வைகோவின் பங்கு மகத்தானது - திருமாவளவன்.!
Thirumavalavan speech about Vaiko
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஈழத்தமிழர் விவகாரத்தை வைத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதாக தெரிவித்திருந்தார். இதற்கு மதிமுக தரப்பு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதன்படி மதிமுக பொறுப்பாளர் ராஜேந்திரன் என்பவர் இந்த அறிக்கையை வெளியிட்டுயிருந்தார். அதில் மதிமுக தலைவர் வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக திருமாவளவன் என்றும் இருக்கிறார். ஆனால் அவர் ஈழத் தமிழர் விவகாரத்தில் பொதுவான கருத்தை அவர் கூறியுள்ளார். மேலும் விடுதலை புலிகளை ஆதரித்த காரணத்திற்காக பல்வேறு அரசியல் இழப்புகளை தமிழகத்தில் சந்தித்தவர் வைகோ என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக திருமாவளவன் நேற்று பேசியதாவது, ஈழத் தமிழர் போராட்ட விவகாரத்தில் மதிமுக தலைவர் வைகோவின் பங்கு மகத்தானது. மேலும், அது மறுக்க முடியாத ஒன்று என தெரிவித்தார். மேலும் பல்வேறு தலைவர்களும் அவர்களது திறனுக்கு ஏற்ப தங்களது எதிர்ப்புகளை வழிகாட்டி வந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Thirumavalavan speech about Vaiko