திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பெயரில் மோசடி! பக்தர்களே உஷார்!
Thirunallar Temple some issue
காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலை முன்னிட்டு மீண்டும் போலி இணையதளம் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வரர் தனிப்பட்ட சன்னதி கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார்.
சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப் பெயர்ச்சி காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் இங்கு தரிசனத்திற்காக திரளுகின்றனர்.
கோவில் நிர்வாகம், நேரில் வர முடியாத பக்தர்களுக்காக அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அர்ச்சனை, அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கான பணம் செலுத்தும் வசதியை வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு போலி இணையதளம் மூலம் சில மோசடிகள் நடந்ததை தொடர்ந்து, மீண்டும் 2 வாரங்களுக்கு முன்பு இதே போலி இணையதளம் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த இணையதளத்தில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பணம் செலுத்தி மோசடிக்குள்ளாகியுள்ளனர்.
பக்தர்களிடம் கோடிக்கணக்கான தொகை வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், சில முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் இருப்பதற்கான தகவல்களும் வெளியாகியுள்ளன. கோவில் நிர்வாக அதிகாரிகள் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
English Summary
Thirunallar Temple some issue