இன்ஸ்டா லவ்! உடுமலைப்பேட்டை குளத்தில் மிதந்த பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேர்!
Thiruppur Udumalai pettai school girl and 2 mens death
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே குளத்தில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் 16 வயது பள்ளி சிறுமி, சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 20), மற்றும் சிறுமியின் உறவினர் மாரிமுத்து (வயது 20) என்பது தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் ஆகாஷ் சிறுமியுடன் பழகியதாகவும், அவரைப் பார்க்க வந்த ஆகாஷ், சிறுமி, மற்றும் மாரிமுத்து மூவரும் ஒரே பைக்கில் சென்றபோது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, சிறுமியை காணவில்லை என இரு தினங்களுக்குமுன் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறுமி உட்பட மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Thiruppur Udumalai pettai school girl and 2 mens death