திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது நேர்ந்த விபரீதம்! காயமடைந்த பக்தர்கள்!
Thiruvannamalai chariot race Electricity flows devotees Injured
திருவண்ணாமலை மகா ரதம் என அழைக்கப்படும் அண்ணாமலையார் திருத்தேர் மாடவீதி உலா நடைபெற்று வருகிறது.
இந்த தேரோட்டத்தை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்துச் சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் சிலர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறைவான அளவு மின்சாரம் பாய்ந்ததால் லேசான காயங்களுடன் பக்தர்கள் சிலர் உயிர்த்தப்பினர். கூட்டத்தில் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது மாடவீதியில் இருந்த ஒரு கடையில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனை கவனித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி பக்தர்களை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
Thiruvannamalai chariot race Electricity flows devotees Injured