திருவண்ணாமலை நிலச்சரிவு: 7வது நபரின் உடல் சடலமாக மீட்பு!
thiruvannamalai landslide update
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது 01-12-2024 அன்று கனமழையின் காரணமாக அவர் வீட்டில் மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து விழுந்ததில் அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது.
இதனையறிந்து மாவட்ட நிர்வாகத்தினர் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படையின் கமாண்டர் உட்பட 39 வீரர்கள் நேற்று இரவு முதல் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்த ஏழு நபர்கள் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். இதில், ஆறு பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், தற்போது 7 வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து உள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
thiruvannamalai landslide update