அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு கிளப்பிய பக்தர்கள்: ஒருவரை ஒருவர் தாக்கி மோதல்!
Thiruvannamalai temple devotees attacking
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று ஆங்கில புத்தாண்டை ஒட்டி உள்ளூர், வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால் கூட்டம் அலைமோதியது.
புத்தாண்டு தினம் என்பதால் பக்தர்கள் 3 முதல் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முக்கிய பிரமுகர்கள், விஐபிகளை வருவாய் துறை, காவல் துறை, அறநிலை துறை உள்ளிட்ட துறையினரால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதை பார்த்த வெளி மாநில பக்தர்கள் அங்கு சென்று காத்திருந்த நிலையில் கோபுர கதவு பூட்டப்பட்டிருந்தது.
பின்னர் விஐபிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கோபுர வாசல் திறக்கப்பட்ட போது அங்கு காத்திருந்த பக்தர்கள் முண்டி அடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்ததால் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து பக்தர்கள் தெரிவித்திருப்பதாவது, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்வது குறித்து முறையான அறிவிப்பு பலகை, வழிகாட்டு பலகை வைக்கப்படுவதில்லை.
இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனால் பக்தர்களின் நலன் கருதி தரிசன முறையில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Thiruvannamalai temple devotees attacking