விஜய்யை இதற்காகதான் இந்தியா கூட்டணிக்கு அழைத்தோம்: செல்வப்பெருந்தகை விளக்கம்!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் கட்சி கொள்கை, கோட்பாடு, சமூக நீதி பேசுவது என அனைத்தும் இந்தியா கூட்டணியுடன் ஒத்துபோவதால் அவரை இந்தியா கூட்டணிக்கு அழைத்தோம் என்றும் வேறு எதுவும் இல்லை என  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் பிரசாரம் செய்ய உள்ளோம் என்றும்  ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி போடுவது என்பது அந்தந்த கட்சிகளின் முடிவு என கூறினார் . 

மேலும் தொடர்ந்து பேசிய அவர் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் தமிழக மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் என்றும்  ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும்  இந்த மண்ணை பாதுகாக்க கூடிய தலைவர்களாக ராகுல்காந்தியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் உள்ளனர் என்றும்  எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என கூறிய  செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியோடு திமுகவினருடன் இணைந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள் என தெரிவித்தார் .

மேலும் தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை நடிகர் விஜய்யின் கட்சி கொள்கை, கோட்பாடு, சமூக நீதி பேசுவது என அனைத்தும் இந்தியா கூட்டணியுடன் ஒத்துபோவதால் அவரை இந்தியா கூட்டணிக்கு அழைத்தோம் என்றும்  வேறு எதுவும் இல்லை என விளக்கமளித்தார்.மேலும்  விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் இப்படிப்பட்ட காலத்தில் கோமியம் குடியுங்கள் என கூறுகின்றனர் என்றும்  அனைவரையும் முட்டாள் ஆக்குவதுதான் பாஜக அரசியல் என செல்வப்பெருந்தகை . இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is why we invited Vijay to the India alliance: Selvaperunthagai 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->