தூத்துக்குடி | ஆம்லேட்டுக்காக நடந்த சாதி சண்டை!
Thoothukudi omelets fight caste conflict police investigation
தூத்துக்குடி மாவட்டம், புதூரில் உள்ள ஒரு உணவத்தில் ஒரு கும்பல் சாப்பிட சென்றுள்ளது. பின்னர் அவர்கள் அந்த உணவகத்தில் ஆம்லேட்டு சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர்.
அவர்களிடம் ஆம்லேட்டுக்கான பணத்தை கேட்டதால் உணவகத்தின் உரிமையாளரின் மனைவியை ஆபாசமாக திட்டியுள்ளனர்.
அத்துடன் மட்டுமல்லாமல் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த வேற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்தும் அவதூராக பேசியுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்தார்.
சாப்பிட்ட ஆம்லெட்டுக்கு பணம் கேட்டதால் நடந்த ரகளை ஜாதி சண்டையாக மாறிய அவல நிலையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Thoothukudi omelets fight caste conflict police investigation