சர்ச்சை பேச்சு!!!வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்பவர்கள் இந்து விரோதிகள்!!! - எச் ராஜா
Those who oppose Waqf Board Amendment Bill are anti Hindu H Raja
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.

அப்போது அவர் குறிப்பிட்டிருந்ததாவது,"1300 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்த கரிகாலன் கட்டிய சந்திர சுவாமிகள் கோவில் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என கூறுவது வேடிக்கையாகவுள்ளது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்து விரோதிகள்.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சிக்கு வருவது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த எது வேண்டுமானாலும் செய்வோம் " எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது சர்ச்சையாக கிளம்பியுள்ளது.மேலும் அரசியல் ஆர்வலர்கள் இதனை விமர்சித்து வருகின்றனர்.
English Summary
Those who oppose Waqf Board Amendment Bill are anti Hindu H Raja