தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான அரசாணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதாக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர இதர கோட்டங்களுக்கு சேர்த்து இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஒரு பேருந்து ரூ.42 லட்சம் என்று மதிப்பிட்டு, சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது, புதிய பேருந்துகள் வாங்குவதற்கான அரசாணையை போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால் வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில், கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 220 பேருந்துகள், விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பேருந்துகள், கோவை கோட்டத்திற்கு 120 பேருந்துகள், நெல்லை கோட்டத்திற்கு 130 பேருந்துகள், சேலம் கோட்டத்திற்கு 100 பேருந்துகள் என்று மொத்தமாக தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ. 420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thousand new bus buy in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->