மதுபானக் கடைகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல் முக்கியமான நாட்களிலும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், வருகிற 24-ஆம் தேதி மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

அதேபோல், வருகிற 27-ஆம் தேதி காளையாா்கோவில் மருதுபாண்டியா்களின் நினைவு தினம் அனுசரிப்பு, வருகிற 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதனால், வரும் அக்டோபர் 27, அக்டோபர் 29 மற்றும் அக்டோபர் 30 உள்ளிட்ட மூன்று நாள்களுக்கு அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:- ”27.10.2014 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர், நினைவுதினத்தை முன்னிட்டும், 29.10.2024, 30.10.2024 உள்ளிட்ட நாட்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினவிழாவை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மூன்று நாட்களுக்கு மட்டும் மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:- “சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்துார் பகுதியில் இயங்கும் மதுபானக்கடைகள் 23.10.2024 அன்று மாலை 06.00 மணி முதல் 24.10.2024 வரை முழுவதுமாக மூடப்படும்”  என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three days tasmac leave in madurai and sivakangai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->