வத்தலகுண்டு அருகே யானைத்தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


வன உயிரினங்களில் கொம்புகள், தோல், தந்தங்கள் உள்ளிட்டவற்றை கடத்துவதைத் தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார், தலைமையில் வனவர்கள் ரமேஷ், முத்துகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, பெரும்பாறை, சித்தரேவு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதியில் ரோந்து பணிக்குச் சென்றனர்.

அப்போது வத்தலக்குண்டு வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே மூன்று பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். இதைபார்த்த வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த சசிக்குமார், கொடைக்கானல் பள்ளங்கியை சேர்ந்த ஜெயராமன், வீரக்கல் கும்மம்பட்டி பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 யானை தந்தங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for sell ivory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->