விருதுநகர் || திருவிழாவில் நேர்ந்த கொடூரம் - மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.!
three peoples died for electric shock in viruthunagar
விருதுநகர் மாவட்டம் காரிசேரி மாரியம்மன் கோவில் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஒலிபெருக்கி கட்டும் பணியின்போது உயர் அழுத்த மின் கம்பியின் மீது மைக்செட் வயர் உரசி மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மைக்செட் உரிமையாளர் திருப்பதி, மனைவி லலிதா, பாட்டி பாக்கியம் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றனர்.
அதில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples died for electric shock in viruthunagar