சென்னை பெரியமேட்டில் விபச்சாரம் நடத்திய 3 வெளி மாநில இளம் பெண்கள் மீட்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை பெரியமேட்டில் விபச்சாரம் நடத்திய 3 வெளி மாநில இளம் பெண்கள் மீட்பு.!!

சென்னையில் பெரியமேடு பகுதியில் வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் விபச்சார தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அந்த தகவலின் படி போலீசார் நேற்று இரவு சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதைய டுத்து போலீசார் இரண்டு அறைகளில் வாடிக்கையாளர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்த வெளி மாநிலங்களைச் சேர்ந்த மூன்று இளம் பெண்களை மீட்டனர்.

 

அதன் பின்னர் மூன்று பெண்களையும் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து தரவர்களிடம் சிக்கி மோசம் போனவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும், போலீசார் அந்த இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தரகர் ஜபார் பூரி என்பவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three woman rescue in chennai periyamedu for commite prostitution work


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->