நீலகிரி : சுடு தண்ணியில் விழுந்த குழந்தை - மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகனுக்கு வருகிற 27ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதால், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்களது உறவினர்கள் அனைவரும் வந்துள்ளனர். 

இந்த நிலையில், நேற்று இரவு திருமண வீட்டில் ஹீட்டர் மூலம் வாளியில் தண்ணீரை சுட வைத்து இருந்த போது மூன்று வயது சிறுமி ஒருவர் எதிர்பாராத விதமாக அந்த தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, மருத்துவமனையில், செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இருப்பினும் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிறுமியை மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூருக்கு அழைத்து செல்ல அவசர ஊர்தியும் வரவில்லை.

இதற்கிடையே செவிலியர்கள் சிறுமிக்கு குளிர்பானம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதன் படி, உறவினர்கள் சிறுமிக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். ஆனால், சிறிது நேரத்தில் சிறுமி வாயில் நுரை தள்ளியபடி பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் ஏன் குழந்தைக்கு குளிர்பானம் கொடுத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவர் மற்றும் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சிறுமியின் உடலை வாங்க மறுப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சிறுமி உயிரிழன்பதற்கு காரணமானவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பின்னர் உறவினர்கள் சிறுமியின் உடலை வாங்க சம்மதித்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three years olod girl died in fell hot water in nilgiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->