நைட் ஷிப்ட் முடித்துவந்த ஐடி பெண் இஞ்சினியருக்கு.. சக ஊழியரால் நிகழ்ந்த மோசமான அனுபவம்.!
Thuraippakkam Women engineer getting harassment in It park
சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்துள்ளார்.
நள்ளிரவு நேரத்தில், அந்த பெண் தனது பணியை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் களைப்பு தீர டீக்கடை ஒன்றில் டீ குடிக்க வந்துள்ளார். அதே டீக்கடைக்கு சாம் சுந்தர் (29) என்ற தெலங்கானா ஐடி ஊழியரும் டீ குடிக்க வந்துள்ளார்.
அப்பொழுது, அந்த இளம்பெண்ணிற்கு சாம் சுந்தர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து இருக்கின்றார். இதனால், ஆத்திரமடைந்த அப்பெண் சாம்சுந்தரை கண்டித்துள்ளார். மேலும், இதன் காரணமாக சாம் சுந்தர் அப்பெண்ணை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த இளம்பெண் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில், விரைந்து சென்ற போலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்க்கொண்டு, சாம்சுந்தரை கைது செய்து இருக்கின்றனர்.
English Summary
Thuraippakkam Women engineer getting harassment in It park