ஓடஓட பட்டப்பகலில் அரங்கேறிய கொடூர கொலை.. அதிர்ச்சியான திண்டிவனம் மக்கள்.!!
Tindivanam Murder police investigation
திண்டிவனத்தில் அரங்கேறிய கொடூர கொலை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில், பட்டப்பகலில் இக்கொலை அரங்கேறியுள்ளது. சென்னையை பூர்வீகமாக கொண்டவர் விக்னேஸ்வரன் (வயது 26). இவர் இன்று திண்டிவனம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
இந்நிலையில், இவரை இடைமறித்த நபர், சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விஷயம் தொடர்பான விசாரணையில், கொலையானவர், ரகுவரன் என்பவரால் கொலை செய்யப்பட்டுள்ளதும், இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாகவும் காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tindivanam Murder police investigation