திருசெந்தூர் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்! அதிகாலை 4 மணிக்கு தொடக்கம்! - Seithipunal
Seithipunal


திருசெந்தூர் முருகன் கோவிலில் இன்று வருஷாபிஷேகம் காலை 4 மணி முதல் தொடங்கி மாலை 4 மணி அளவில் வீதியுலா வரை நடைபெற்றது:

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத வருசாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த வருசாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நடைபாதை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்டம் என சிறப்பு அபிஷேகங்கள்  நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து, காலை 9.40 மணிக்கு மேல் விமான கலசங்கள், தளத்தில் அமைந்த்துள்ள மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் உருவ சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 

மாலை 4 மணிக்கு, சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை அம்மாளுக்கு 
சாயரட்சை தீபாராதனை செய்யப்பட்டு பின்பு தங்க மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெறவுள்ளது. 

இந்த விழாவை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் உறுப்பினர்களான கணேசன், செந்தில் முருகன், ராம்தாஸ், அனிதா குமரன்,மற்றும் கோவில் பணியாளர்கள் போன்றோர்கள் ஏற்பாடு செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiruchendur varushabishekam today morning 4 clock start


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->