நடிகர் விஜய்யை பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்: 2 பெண்கள் உள்பட 6 பேர் காயம்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் நடிகர் விஜய் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 2 பெண்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். 

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பெய்த கன மழை காரணமாக பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்தனர். 

பல்வேறு இடங்களில் சாலைகள், பாலங்கள் உடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பால் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாக மாறி உள்ளது. 

வீடுகள், தொழிற்சாலைகளில் தண்ணீர் புகுந்ததால் அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன. இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் விஜய் 1500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். மேலும் வீடுகளை இழந்த 2 பேருக்கு ரூ. 50,000, வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ. 25,000 வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து 2500 பேருக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் நடிகர் விஜய் நிகழ்ச்சியில் அவரை பார்க்க முயன்ற போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 2 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli actor Vijay see tried 6 people injured 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->