திருநெல்வேலியில் பதற்றம்: சப்-இன்ஸ்பெக்டர் மகனின் விபரீத முடிவால் கதறும் குடும்பம்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் பாலமுருகன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு கற்பகவிநாயகம் (வயது 27), விக்னேஷ் (வயது 24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 

இதில் இளைய மகன் விக்னேஷ் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9 அணி காவலராக பணியாற்றி வருகிறார். மூத்த மகன் கற்பகவிநாயகம் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கதவை பூட்டிக்கொண்டு தூங்கச் சென்ற கற்பகவிநாயகம் நேற்று மாலை கதவை திறக்கவில்லை. 

இதனால் சந்தேகமமடைந்த குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது கற்பகவிநாயகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்தார்.

இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கற்பகவிநாயகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli sub inspector son suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->