திருப்பூர் | தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! தொடர் கோரிக்கையில் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


திருப்பூர்: பல்லடம் அருகே தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் சார்பில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர், பொங்கலூர் ஒன்றிய தலைவர், ஒன்றிய செயலாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர், மாவட்ட தலைவர், மாநகர் மாவட்ட தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக தேங்காய்க்கு விலை வேண்டும், கொப்பரை தேங்காய் ஒன்றுக்கு ரூ.140 வழங்கி, 35 ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிற கள்ளுக்கான தடையை நீக்கி அனுமதி தர வேண்டும். 

பச்சை தேங்காய் கிலோ ரூ.50 க்கு கொள்முதல் செய்து, நியாயவிலை கடைகளில் பாமாயில் எண்ணெய்யை தடை செய்து தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடைபெற்றது. 

இந்த கோரிக்கையை உடனடியாக அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். இந்த தொடர் போராட்டம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறும்.

அரசு பரிசீலனை செய்யவில்லை என்றால் தொடர்ந்து, சென்னை சென்று தலைமைச் செயலகத்தின் முன்பு விவசாயிகள் பெரும் திரளாக திரண்டு மாபெரும் போராட்டம் நடைபெறும் என் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur protest against falling coconut prices


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->