திருப்பூரில் சோகம்: பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்த தடுப்பூசி! தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


திருப்பூர், பல்லடம் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கபின். இவரது மனைவி ஏஞ்சலின். இவர்களுக்கு சுஜன் என்ற 4 மாத கைக்குழந்தை உள்ளது. 

குழந்தைக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்துவதற்காக நேற்று பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஊசி போட்டுவிட்டு வீடு திரும்பி உள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை குழந்தை அசைவின்றி கிடந்தவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக குழந்தையை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். 

உடனடியாக இந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சமத்துவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தடுப்பூசி போட்ட குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupur vaccinated 4 month child dies police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->