திருவள்ளூரில் பதற்றம்: வயலில் பலூனுடன் விழுந்த மர்ம பொருள்: அதிர்ச்சியில் கிராமமக்கள்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர், திருத்தணி ஆதிவராகபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் வானத்திலிருந்து மர்ம பொருள் ஒன்று நேற்று காலை கீழே விழுந்தது. 

பலூன் போன்ற பொருளுடன் மர்ம பொருள் ஒன்று கிடந்தது. அதில் சிக்னல் வந்தபடி சிறிய அளவிலான பெட்டி ஒன்று இருந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து அறிந்ததும் ஏராளமான மக்கள் அங்கு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

விசாரணையில் மர்ம பொருளில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என்றும் போன் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அந்த எண்ணை தொடர்பு கொண்டு அதிகாரிகள் விசாரணை செய்தபோது அந்த மர்ம பொருள், வானிலை ஆராய்ச்சி மையத்திற்காக அனுப்பப்பட்டது தெரிய வந்தது. 

வெப்பநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவும் என்றும் இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து கீழே விழுந்த பொருளை வட்டாட்சியர் கைப்பற்றி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvallur Mysterious object balloon field


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->