தி.மலை | கள்ளச்சாராய விவகாரம் - கண்டுகொள்ளாத 5 காக்கிகள் சஸ்பெண்ட்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் கள்ளச்சார விற்பனையை தடுக்க தவறிய காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து காவலர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விழித்துக் கொண்ட தமிழக அரசு, தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் தயாரித்தவர்கள் என மொத்தம் 1600 பேரை கைது செய்தது.

மேலும் தொடர் கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்ஐ உள்ளிட்ட ஐந்து காவலர்களை பணியிட நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல்கள் கிடைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்ணமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அருள், தானிப்பாடி காவல் நிலைய தலைமை காவலர் யூஜின் நிர்மல், சிவா ஆகியோர் பணிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கீழ் கொடுங்கலூர் காவல் நிலைய தலைமை காவலர் ஹரி, செங்கம் காவல் நிலைய தலைமை காவலர் சோலை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் நேற்று வரை கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai kallasarayam case 5 police suspended


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->