பாஜக அரசு தமிழகத்தின் உரிமைகளை பறித்தால்.. திமுகவின் போர்க்குணம் வெளிப்படும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு.!
tiruvarur muthuvel karunanithi book introduce function
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் "திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணியின் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு இந்த நூலை வெளியிட்டார். இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதைதொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,
"ஒன்றிய பாரதிய ஜனதா அரசு பழிவாங்க நினைத்தாலோ, தமிழகத்தின் உரிமைகளை பறித்தாலோ, திமுகவின் போர்க் குணம் வெளிப்படும்" என்று தெரிவித்துள்ளார்
English Summary
tiruvarur muthuvel karunanithi book introduce function