#BREAKING || தமிழக சட்டப்பேரவையில் விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு.! மத்திய அரசு தான் இதுக்கு காரணமாம்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலேயே தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் முதல் சட்டபேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் தமிழ் தாய் வாழ்த்து படப்பட்டதும்,  பிறகு ஆளுநர் ஆங்கிலத்தில் ஆர்.என்.ரவி உரையாற்ற தொடங்கும் போதே, விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். 

மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தற்போது, ஆளுநர் ஆங்கிலத்தில் ஆர்.என்.ரவி உரையாற்றி வருகிறார். அவரின் உரையில், இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது" என்று ஆளுநர் ரவி அவர்கள் உரையாற்றியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN ASSEMBLY VCK MLA OUT


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->