#BigBreaking | கூடுகிறது தமிழக அமைச்சரவை! வெளியான முக்கிய தகவல்!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் வருகின்ற மார்ச் மாதம் 9ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தோடு குறித்து இன்று மாலை சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பை செய்தியாளர்களை சந்தித்து வெளியிட இருக்கிறார்.

இந்நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சரவை கூட்டம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கியமான திட்டங்களுக்கும், அரசின் கொள்கை ரீதியான முடிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கக்கூடிய திட்டம் குறித்த அறிவிப்புகளும் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Cabinet meet 09 march 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->