#BREAKING:: மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக முதல்வர் உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அம்மாநிலத்தில் இருக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பாற்ற நிலையில் சிக்கி தவிக்கின்றனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.05.2023 அன்று பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அலுவலர்களை இது குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதற்கிணங்க மணிப்பூர் மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுடன் உடனடியாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விவாதித்து அவர்களுக்கு தேவையான தண்ணீர் உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசால் அம்மாநில அரசு மற்றும் மணிப்பூர் தமிழ் சங்க பிரதிநிதிகள் உடன் இணைந்து ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.

மருத்துவம் பயிலும் மாணவர்கள் அவர்தம் கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும், கல்லூரி தேர்வுக்கு தயாராகி வருவதாலும் தற்சமயம் தமிழ்நாட்டுக்கு திரும்பி வர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்கள். 

அதே நேரத்தில் தமிழ்நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள விருதுநகர்-1, தூத்துக்குடி-1, திருவள்ளூர்-2 மற்றும் கடலூர்-1 மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 5 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர அயலகத் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு துறை மூலம் விமான பயண சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் இன்று (09.05.2023) இரவு சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள். அவர்கள் அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்கு சென்று சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துறையால் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மோரே தமிழ் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்களது பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசால் மணிப்பூர் அரசு மற்றும் தமிழ் சங்கப் பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM orders rescues Tamils ​​from Manipur riots


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->