தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 430 பொறியியல் கல்லூரிகளில் 1,57,378 இடங்கள் உள்ளன. இதில், 2023-2024 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 24 முதல் 26 வரை நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN engineering councelling from today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->