தமிழக அரசின் அடுத்த அதிரடி! மாவட்டத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

அண்மையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்யவும், அது குறித்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை‌ செயல்படுத்த, கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள்.

மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும்".

கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN government chief secretary other every district one IAS officer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->