பள்ளி திறக்கும் நாளில்.. அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் மாணவ / மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் ஆகியவை விநியோக மையங்களிலிருந்து 31.05.2024-க்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டிற்கு மாவட்ட கல்வி அலுவலர்களிடமிருந்து இவ்வியக்ககத்திற்கு அனுப்பப்பட்ட தேவைப்பட்டியலின் அடிப்படையில் நோட்டுப்புத்தகம் மற்றும் பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை பெறப்பட்டுள்ளதை மாவட்டக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள். நோட்டுப்புத்தகங்கள், பெறப்பட்ட விவரத்தினை இருப்புப் பதிவேட்டில் சார்ந்த அலுவலர்களால் உரிய பதிவுகள் மேற்கொண்ட பின்பு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்போது நோட்டுப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை வழங்கல் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பள்ளித் தலைமையாசிரியர்களிடம் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு தேவையான அளவில் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கையொப்பம் பெற்று மாவட்டக்கல்வி அலுவலக கோப்பில் பராமரிக்க வேண்டும். விநியோக மையங்களிலிலிருந்து சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை) மூலம் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் தேவைப்பட்டியலின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

 

மாவட்டக்கல்வி அலுவலர்கள் மூலம் கோரப்பட்ட தேவைப்பட்டியலை விட கூடுதல்/குறைவாக பெறப்பட்டால் இவ்வியக்ககத்திற்கு உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்குத் தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் பெறப்படவில்லை எனில் வேறொரு மாவட்டத்தில் கூடுதலாக பெறப்பட்டிருப்பின் அவற்றைப் பெற்று தேவையான பள்ளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு நடவடிக்கை மேற்கொண்ட இருப்பின் மின்னஞ்சல் (v2section2022@gmail.com and Dseesection@gmail.com) மூலம் உடனடியாக தெரிவித்து விட்டு, அது சார்ந்த விவரங்களை இணை இயக்குநருக்கு அலைபேசி வழியாக உடன் தெரிவிக்க வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn government order note book distribute in school open


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->