முக்கிய விவகாரம் | டெல்லி புறப்பட்ட தமிழக ஆளுநர்! அமித் ஷாவை சந்திக்கிறாரா?!
TN Governor Governor RN Ravi
இன்று காலை 7 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்தித்து பேசும் ஆளுநர், பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 20-ந்தேதி நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டும், ஆளுநரை கண்டித்தும் தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லியில் 3 நாட்கள் தங்கும் ஆளுநர் ரவி, யாரையெல்லாம் சந்திக்க போகிறார். அவரின் பயண நோக்கம் என்னவாக இருக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
English Summary
TN Governor Governor RN Ravi