அரசியல் சாசனப் பிரிவு 154, 163, 164 அதிகாரம் என்ன தெரியுமா? அடித்து ஆடும் ஆளுநர்! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை நீக்க தனக்க அதிகாரம் உள்ளது என்றும், அரசியல் சாசனப் பிரிவு 154, 163, 164-யை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால், அவர் மீதான வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும். செந்தில் பாலாஜி கைதானது குறித்து நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்) என்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் ஆளுநர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிப்பது பற்றி நான் விளக்கம் கேட்டும், நீங்கள் சரியான பதில் தரவில்லை. உங்களின் அந்த பதில் ஏமாற்றம் அளிக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாவதற்கு முன்பே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கூறியிருந்தேன். அதற்கான உங்களின் பதில் கடிதத்தில் விளக்கம் எதுவும் தராமல், விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கடிதம் எழுதி உள்ளீர்கள்.

ஜூன் ஒன்றாம் தேதி மற்றும் ஜூன் 16ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் விரும்பத்தகாத சொற்களை பயன்படுத்தி உள்ளீர்கள். 

செந்தில் பாலாஜி இலக்காயிலாத அமைச்சராக நீடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனது அறிவுரையை மீறி செந்தில் பாலாஜியை அமைச்சராக நீடிப்பதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று தெரிவித்துள்ள ஆளுநர், உச்ச நீதிமன்ற கருத்துக்களையும் மேற்கோள்கட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor RN Ravi Letter info Senthilbalaji issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->